Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரச்சனை, அச்சுறுத்தலுக்கு கவலையில்லை… சிப்பாயாக மாறிய ஓபிஎஸ்… பரபரப்பு பேச்சால், ஈபிஎஸ் ஷாக் …!!

இன்று சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களால் தொண்டர்களுக்கான இயக்கமாக தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கி, மூன்று முறை முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள்.

புரட்சித் தலைவர் மறைவுக்கு பின்னால்,  மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 30 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய வலுவினையும்,  தமிழக மக்களின் மரியாதையையும், அன்பையும் பெற்று  16 ஆண்டு காலம் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி, நாட்டு மக்களுக்கு எது தேவையோ ? அதை சமூக பொருளாதார நிலைகளில்.. நடுநிலையாக நின்று,

சமூக பாதுகாப்பு திட்டங்களை மக்கள் நலன் கருதி இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி மாநிலங்களாக  முதலமைச்சராக இருந்து பணியாற்றினார் என்பதனை நாம் எல்லாம் நன்றாகவே அறிவோம். ஆக இந்த இரு பெரும் தலைவர்களும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு செய்த தியாகங்கள்,  தன்னுயிரை கொடுத்துள்ளனர். இருப்பெரும் தலைவர்களும் இந்த இயக்கம் உருவான காலத்தில் இருந்து அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இந்த இயக்கம்.

புரட்சித் தலைவர் உருவாக்கிய சட்டம், கழக சட்ட விதியை அப்படியே புரட்சித்தலைவி  மாண்புமிகு அம்மா அவர்களும் அடிபிறழாமல் கட்டிக் காப்பாற்றினார். இவைகள் எல்லாம் இன்றைக்கும் பல நூறாண்டுகள் கடந்தாலும் நீடிக்கும். அனைத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட விதி புரட்சித்தலைவர் டாக்டர் இதய தெய்வம் புரட்சித்தலைவர் உருவாக்கிய அந்த விதி, மாண்புமிகு அம்மா அவர்கள் கடைப்பிடித்த அந்த விதியை எந்தவிதமாகவும் காப்பாற்றுகின்ற பொறுப்பில் தான் இன்றைக்கு நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம்.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும், எவ்வளவு அச்சுறுத்தல் வந்தாலும் அதை கட்டிக்  காப்பாற்றுகின்ற சிப்பாய்களாக தான் இன்றைக்கு ஒன்றை கோடி தொண்டர்களும் இருக்கிறார்கள் என்பதையும்,  எங்களுக்கு தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து பொதுமக்களும் மிகப்பெரிய ஆதரவினை தந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும்,

புரட்சித்தலைவர் அவர்களை பொறுத்தவரையில் தொண்டர்கள் தான் இந்த இயக்கத்தினுடைய அடித்தளம், ஆணிவேர். அந்த தொண்டர்களுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை தந்திருக்கிறார். ஒரு சாதாரண தொண்டன் கூட இந்த இயக்கத்தின் தலைமை பொறுப்பிற்கு வர முடியும் என்ற சட்ட விதிகள் வகுத்து தந்திருக்கிறார் என தெரிவித்தார்.

Categories

Tech |