தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை ,நீலகிரி ,விருதுநகர் ,தென்காசி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, சேலம், கள்ளக்குறிச்சி , தர்மபுரி, ஈரோடு , கரூர், திருச்சி, நாமக்கல் , சிவகங்கை , புதுக்கோட்டை, கடலூர் , பெரம்பலூர், அரியலூர் , மயிலாடுதுறை, சிவகங்கை, நாகப்பட்டினம் ,திருவாரூர் , தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் , கடலூர், புதுக்கோட்டை ,சிவகங்கை ,தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய 27 மாவட்டங்களில் 20ஆம் தேதி கன முதல் கன மழை பெய்யக்கூடும்.