Categories
டெக்னாலஜி

ஆப்பிள் ஐபோன் பிரியர்களே!…. திடீரென உயர்ந்த விலை!…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஆப்பிள் நிறுவனம் தன் மலிவுவிலை போனின் விலையை திடீரென்று உயர்த்தி இருக்கிறது. இந்நிறுவனம் தன் மலிவு விலை iponeSE 2022-ஐ நடப்பு வருடத்தின் துவக்கத்தில் இந்தியாவில் ரூபாய். 43,900 என்ற ஆரம்பவிலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோனின் விலையானது  இப்போது இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதன் விலை ரூபாய்.45,000 ஆக அதிகரித்துள்ளது. சமீபத்திய ஐபோன்-SE மாடல்களின் சிறப்பு அம்சங்களில் 4.7-இன்ச் ரெடினா டிஸ்ப்ளே மற்றும் A15 பயோனிக் சிப்செட் போன்றவை அடங்கும். இந்த அமைப்பானது Ipone 13 தொடரையும் இயக்குகிறது. புதிய விலை அதிகரிப்பானது  தற்போது ஆப்பிள் ஸ்டோர் இந்தியாவில் லைவ்வாக இருக்கிறது.

ஆப்பிள் iponeSE ரூபாய். 43,900 (64 gp) என்ற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை தற்போது ரூபாய். 49,900-க்கு கிடைக்கிறது. 128gp சேமிப்பு மாறுபாட்டின் விலையானது முன்பு ரூபாய்.48,900 ஆக இருந்தது. ஆனால் இப்போது ரூபாய்.54,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி 256gp மாறுபாட்டின் விலை தற்போது ரூ.64,900 ஆக இருக்கிறது. ipone மாடல் மிட் நைட், ஸ்டார்லைட் மற்றும் பிராடக்ட் (சிவப்பு) வண்ணங்களில் கிடைக்கிறது. iponeSE 2022ன் விலைகள் அதிகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்று பயனர்கள் வியந்து வருகின்றனர். இருப்பினும் இதற்கான குறிப்பிட்ட காரணம் எதையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

 

Categories

Tech |