ஒடிசா மாநிலத்தில் 50,000 மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் முறைப்படுத்தப்படுவதாகவும், அதனால் ஒப்பந்தத்தில் பணி ஏமாற்றுவதை ஒடிசா மாநில அரசு ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயகக் அறிவித்துள்ளார். அதனைப் போல தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் அனைத்து துறையிலும் ஒப்பந்த பணியில் ஏராளமான பணியாற்றி வருகிறார்கள். இதனை முறைப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் அனைவரையும் பணிந்தன் செய்ய வேண்டும் என கோரிக்கை இழந்துள்ளது. சட்டசபை கூட்ட தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து அறிவிக்கப்படுமா என பலத்தை எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இது குறித்து தமிழக அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது, அதிமுக ஆட்சியில் திமுக எம்எல்ஏக்கள் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும், அனைத்து நாளும் வேலை வழங்க வேண்டும் என 10 ஆண்டாக சட்டசபையில் கோரிக்கை வைத்தனர். இப்போது திமுக ஆட்சி தான் நடக்கிறது. அப்போது எங்களுக்காக பேசிய திமுக, அந்த கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருக்கிறது. உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் தர்மபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதி நேர ஆசிரியர்களிடையே நிதானம் செய்வேன் என்று இன்றைய முதல்வர் அப்போது நம்பிக்கை கொடுத்தார். திமுக தேர்தல் அறிக்கை 181 வது வாக்குறுதியாக சேர்த்து மீண்டும் திமுக பகுதிநேர ஆசிரியர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. இதற்காக முதல்வரின் நேரில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்து வருகிறோம். பள்ளி கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு நேரில் கொடுத்தும், கோரிக்கை அனுப்பியும் வருகிறோம். எனவே 12,483 குடும்பங்களுக்கு பணி நிரந்தரம் விடியலை முதல்வர் தர வேண்டும் என்பது எங்கள் ஒற்றை கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.