தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நவரச நாயகன் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு நல்ல தம்பி, மௌனராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இவர் தற்போது சிந்துபாத், ரோஜா மலரே உள்ளிட்ட படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் தீ இவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுகன்யா மற்றும் ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் டி.எம் ஜெயமுருகன் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது ‘மேலே ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம்’ என்ற பாடலுக்கு நடிகை சன்னி லியோனை நடனம் ஆட வைக்க வேண்டும் என பட குழுவினர் விருப்பப்பட்டுள்ளனர். மேலும் படத்தின் கதையை நடிகை சன்னி லியோனிடம் கூற அவருக்கு கதை பிடித்து போகவே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட ஒப்புக் கொண்டுள்ளாராம். மேலும் இந்த தகவலை இயக்குனர் மகிழ்ச்சியுடன் தெரிவித்த நிலையில், சன்னி லியோன் நடனம் ஆடுவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.