Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற சிறுமி…. புற்றுநோயால் பறிபோன உயிர்… பெரும் சோகம்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல்கொட்டாய் பகுதியில் சகாதேவன்- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், சத்யா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் சத்யா 5- ஆம் வகுப்பு படிக்கும் போதே பல்வேறு தடகள போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட சத்யா மாநில அளவில் 7-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். இவர் 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதுகு புறத்தில் சிறுமிக்கு வலி ஏற்பட்டது. இதனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது முதுகு தண்டுவடத்தில் புற்றுநோய் கட்டி இருப்பது உறுதியானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் சிறுமிக்கு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்ட நிலையில், அவர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தபோது சிறுமிக்கு மீண்டும் புற்றுநோய் புற்றுநோய் கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது. புற்று நோய் மூன்றாவது நிலையை எட்டியதால் 30 லட்சம் ரூபாய் மருத்துவ செலவுக்கு தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 5 லட்ச ரூபாய் கட்டினால் 20 லட்சம் ரூபாய் வரை காப்பீடு திட்டத்தில் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தம்பதியினர் நிலத்தை அடகு வைத்து ஒரு லட்ச ரூபாயை கட்டிய நிலையில் புதுச்சேரி தனியார் நிறுவனத்தினர் முழு செலவையும் ஏற்று சிறுமியை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். ஆனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |