கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியர்கள் இந்த 3 நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இதில் சீனாவுக்கு அடுத்த படியாக தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலும் வேகமாக உயிர்பலி வாங்கி வருகிறது கொரோனா.
இந்த நிலையில் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் 14 நாட்கள் நோய்த்தடுப்பு தனிமைக் காவலில் வைக்கப்படுவார்கள் என சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த 3 நாடுகளுக்குசெல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், சுகாதார அமைச்சக கொரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் +91-11-23978046 அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேட்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.