லிஸ் டிரஸ்ஸை பதவி நீக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரித்தானிய பிரதமர் போலீஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து அவர் சார்ந்த கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவருக்கு பதிலாக லிஸ் டிரஸ்ஸை பிரதமராக தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர் பொறுப்பேற்ற நேரம் பிரித்தானிய பொருளாதாரத்தில் தடுமாற அதை எதிர் கொள்ள லிஸ் டிரஸ் அமைச்சரவை தடுமாறி வருகின்றது. இந்த சூழலில் லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் குரல் வலுக்க தொடங்கியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிஸ் டிரஸ் மீது நம்பிக்கை இல்லை என கூறும் கடிதங்களை கன்சர்வேட்டிவ் கட்சி கமிட்டி தலைவரிடம் தயாராக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் லிஸ் டிரஸ்ஸை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். ஆனால் லிஸ் டிரஸ்ஸை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் அது பொது தேர்தலுக்கு வழிவகுக்கும் எனக் கூறி வாதம் முன்வைத்து கன்சர்வேட்டிவ் கட்சி கமிட்டி தலைவரான graham brady லிஸ்டர்ஸ்க்கும் புதிதாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெரமிஹண்டுக்கும் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.