Categories
சினிமா தமிழ் சினிமா

“வெற்றிகரமான 32 வருட திரைப்பயணம்” நீங்கள் மட்டும் தான் காரணம்…. நடிகர் விக்ரம் உருக்கம்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சியான் விக்ரம். இவர் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி தற்போது 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த தகவலை நடிகர் விக்ரம் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த 1990-ம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி வெளியான என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் விக்ரம் நடிகராக அறிமுகமானார். விக்ரமுக்கு நடிகர் என்பது மிகப்பெரிய கனவு மற்றும் சவால் என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் ஒரு காலத்தில் விக்ரம் வாய்ப்பு கிடைக்காமல் டப்பிங் கலைஞராக பணியாற்றியதோடு பல நடிகர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார். நடிக்க வந்த நாளிலிருந்து 9 ஆண்டுகள் அவருக்கு போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது என்ற திரைப்படம் தான் அவருக்கு மிகப்பெரிய அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த படத்திற்குப் பிறகு பல வெற்றி படங்களை கொடுத்த விக்ரம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இதனையடுத்து அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் நடிகர் விக்ரம் நடித்து அசத்தியிருப்பார்‌. இந்த படம் 450 கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகர் விக்ரம் பேசியது பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் தன்னுடைய திரை பயணம் தொடங்கி 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு வீடியோவுடன் தெரிவித்துள்ளார்.

அதில் இத்தனை கனவுகள். அத்தனை வருடங்கள். முயற்சி திருவினையாக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்திற்கு மிகவும் நன்றி. அபிநந்தனின் இந்த எடிட்டுக்கு நன்றி என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்களும் விக்கிரமின் படங்களின் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை வைத்து வீடியோக்களை உருவாக்கி இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அதோடு #32YearsOfVIKRAMism என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி விக்ரம் 32 ஆண்டுகள் திரைப்பயணத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/KennySundharCvf/status/1581845483571798017

Categories

Tech |