Categories
டெக்னாலஜி

ஐபோன் நிறுவனத்திற்கு இவ்வளவு அபராதமா….? பிரேசில் நீதிமன்றம் அதிரடி….!!!

பிரேசில் நாட்டு நித்ததுறை சார்பில் ஐபோன்களுடன் சார்ஜர் வழங்காமல் விற்பனை செய்த விவகாரத்தில் Apple நிறுவனத்திற்கு 2.34 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் சார்ஜர்கள் இன்றி iPhone விற்பனையை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  Apple நிறுவனத்திற்கு மற்றொரு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களின் படி, Apple  நிறுவனத்திற்கு பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நீதிமன்றம் 100 மில்லியன் ரியாக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,56,59,47,700 அபராதம் விதித்துள்ளது. மேலும் பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும் ஐபோன்களுடன் கட்டாயம் சார்ஜர் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் iPhone 12 மற்றும் iPhone 13 வாங்கிய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சார்ஜர் வழங்கப்பட வேண்டும் என Apple நிறுவனத்திற்கு நீதிபதி கரமுரு அபோன்சோ பிரான்சிஸ்கோ உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பு இறுதியானது இல்லை என்பதால், இதில் மேல்முறையீடு செய்ய முடியும். 2020 ஆண்டு வாக்கில் iPhone 12 வெளியீட்டில் இருந்து iPhone-களுடன் சார்ஜர் வழங்குவதை apple நிறுத்திவிட்டது. Apple நடவடிக்கையை தொடர்ந்து சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்களும் இதே போன்று பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் சார்ஜர் வழங்குவதை நிறுத்தியுள்ளன.

Categories

Tech |