Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையின் குறுக்கே வந்த மாடு…. கோர விபத்தில் பறிபோன உயிர்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் ஆலடி அம்மன் கோவில் தெருவில் குமார்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குமார் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்

இந்நிலையில் முடிச்சூர் சி.எஸ்.ஐ தேவாலயம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது குமாரின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த குமார் மீது அரசு பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |