அடுத்த ஒரு வார காலத்திற்குள் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். இதுபற்றி அவர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மிக நெருக்கடியான இந்த பகுதியில் கூட்டுறவு வங்கி அமைக்கப்பட்டிருப்பது இந்த வட்டாரத்தில் இருக்கக்கூடிய மகளிருக்கு பல வகையில் பயன் அளிக்கிறது. சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்வது தொடர்பான கணக்கிடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்வது தொடர்பாக கணக்கிடும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, எப்படி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதோ, அதுபோல சுய உதவி குழுக்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான ரசீதுகள் வழங்கப்படும்” என்றார்.