கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பிடம் சார்பில் கொல்லம் விளையில் சமய வகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் வழங்கியுள்ளார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது எங்குமே ஹிந்தியை திணிக்கவில்லை பாராளுமன்ற நிலை குழுவினர் ஒரு சிபாரிசு செய்து இருக்கின்றார்கள்.
அதில் எங்குமே மாநில மொழியை குறைத்து மதிப்பிட வேண்டுமென்றோ மாநில மொழியை மீறி ஹிந்தியை கொண்டு வர வேண்டும் என்றோ கூறவில்லை இதை வைத்து மட்டும்தான் அரசியல் செய்ய முடியும் என்பதற்காக இதை மறுபடியும் கையில் எடுக்கின்றார்கள். இன்றைக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் அவர்களின் மாநில மொழியான ஹிந்தியில் மருத்துவ கல்லூரி கொண்டு வந்திருக்கின்றனர் நீங்கள் அரசியலுக்காக மட்டும் தான் பேசுகிறீர்கள் தமிழ் மீது அக்கறை இருந்தால் அது போன்ற முயற்சி செய்து தாய்மொழி மருத்துவ கல்வியை இங்கு கொண்டு வந்திருக்கலாமே தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி கல்வியை ஊக்கப்படுத்த சொல்கின்றார்கள்.
ஆனால் இதை சொன்னால் ஆளுநர் அரசியல் பேசலாமா எனக் கூறி வருகின்றார்கள் இது அரசியல் அல்ல சமூகத்தின் அவலங்களை யார் எடுத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை இருக்கிறது. பிரதமர் திருக்குறள் சொன்னால் திருக்குறள் மட்டும் சொன்னால் போதுமா என்ன கூறுகின்றார்கள். இதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் எத்தனை திருக்குறள் சொன்னார்கள் உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே தமிழ் பற்று தமிழிசைக்கும் இருக்கிறது நியாயப்படுத்தி பேசினால் ஹிந்தி இசை என நீங்கள் பேசுவதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். மேலும் நீங்கள் இத்தனை நாள் ஆட்சியில் ஒரு புத்தகம் கொண்டு வந்து தமிழ் மொழியில் மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியாதா என கூறியுள்ளார்.