தீபாவளி பண்டிகை முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று காலையில் எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். இந்த தீபாவளியை நம்முடைய முன்னோர்கள் தீ ஒளி என்று குறிப்பிடுகிறார்கள். திருமணம் ஆகிய ஜோடி முதன் முதலாக தீபாவளி கொண்டாடுவது தல தீபாவளி. பெண் வீட்டார் தன்னுடைய மகள் மற்றும் மருமகனுக்கு தலை தீபாவளி பரிசாக புத்தாடை, புது நகைகள், இனிப்பு பலகாரங்கள் செய்து கொடுத்து மகிழ்விப்பார்கள். புதுமண ஜோடிகளும் பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த வருடம் தல தீபாவளி கொண்டாட இருக்கும் பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாம்.
லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய காதலர் இயக்குனர் விக்னேஷ்சிவனை கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி கரம் பிடித்தார். கல்யாணம் முடிந்த கையோடு தொடர்ந்து ஹனிமூன் சென்ற வண்ணம் இருந்து வந்தனர். இந்த ஜோடிக்கு இந்த தீபாவளி தல தீபாவளி தான். இரட்டை குழந்தைகளோடு கொண்டாட உள்ளனர்.
பாலிவுட் ஸ்டார்ஸ் ஆன ஆலியா பட் ரன்வீர் கபூர் தம்பதியினருக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு வரும் நவம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பிரபலங்கள் புதுமண தம்பதிகளா மட்டுமில்லாமல் புதிய பெற்றோராகவும் கொண்டாட உள்ளனர் இதற்கிடையில் இந்த ஜோடிக்கும் இந்த தீபாவளி தல தீபாவளி தான். தீபாவளி ஸ்பெஷல் ஆக அவர்களோடு குட்டி ஸ்டார் ஒன்று இணைந்துள்ளது என்பது மகிழ்ச்சியான விஷயம்.
நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவருக்கும் மார்ச் மாதம் திருமணம் நிச்சயம் நடந்து கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இவர்கள் திருமணம் முடிந்து பாரிசுக்கு ஹனிமூன் சென்றிருந்தார்கள். விரைவில் இந்த ஜோடியின் தலை தீபாவளி புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும்.
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் சென்ற மாதம் திருமண நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் திருப்பதியில் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது கல்யாணம் தான். இவர்களுடைய திருமணம் குறித்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த வருடம் இவர்களும் தல தீபாவளி கொண்டாட இருக்கிறார்கள்.