Categories
தேசிய செய்திகள்

டெல்லி மக்கள் சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்!

வடகிழக்கு டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். சமாதானமும், மத நல்லிணக்கமும் நமது பண்பாட்டின் மையக் கருவாக இருப்பதால் டெல்லி சகோதரிகளும், சகோதரர்களும், எல்லா நேரத்திலும் அமைதி, சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நிசப்தமும், சகஜ நிலையும் மிக விரைவாக திரும்புவது முக்கியமானது. டெல்லியின் பல பகுதிகளில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்தேன். அமைதி மற்றும் சகஜநிலையை உறுதி செய்யும் முயற்சியில் காவல் துறையும், இதர பாதுகாப்பு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.

அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்த வன்முறையில் தலைமை காவலர் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |