Categories
தேசிய செய்திகள்

வாகனங்களுக்கு பேன்சி நம்பர்…. இரு மடங்காக உயர்ந்த கட்டணம்….. நவம்பர் 1 முதல் அமல்….!!!!

தமிழகத்தில் வாகனங்களுக்கான பேன்சி நம்பர் என்ற ராசி எண்களை பெறுவதற்கு 8 லட்சம் ரூபாய் வரை கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. வாகனம் வாங்குவோருக்கு ஒதுக்கப்படும் பதிவு எண்ணுக்கு பதிலாக செல்வந்தர்கள்,தொழிலதிபர்கள் மற்றும் திரைப்படத் துறையினர் உள்ளிட்டோர் தங்களின் ராசிக்கு உகந்த எண்கள் அல்லது தங்களுக்கு பிடித்த மாணவர்களின் பிறந்தநாள் குறித்த எங்களை கேட்டு பெறுகிறார்கள்.அதற்கு 40 ஆயிரம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி கடந்த வாரம் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதன்படி வாகன ஓட்டிகள் தங்களுக்கு பிடித்தமான பதிவு எண்ணை பெறுவதற்கு குறைந்தபட்சமாக இருந்த 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் தற்போது 80 ஆயிரம் ரூபாயாகவும், 60,000 ஆக இருந்த கட்டணம் 1.20 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக இருந்த நான்கு லட்சம் ரூபாய் கட்டணம் தற்போது 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

Categories

Tech |