தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 5 ஏதேர்வுக்கு அரசு சார்பாக நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்பில் சேர இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்காக தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சார் தியாகராய கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரி ஆகிய இடங்களில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்படுகின்றது.
உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான 161 காலியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில் இந்த தேர்வுக்கு இலவச பயிற்சி பெற தேர்வர்கள் www.civilservicecoaching.comஎன்ற இணையதளத்தில் உங்களின் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதனை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரியில் செயல்படும் போட்டி தேர்வுகள் பயிற்சி மைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் . மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9865808127, 9894541118 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.