பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருடைய கணவரை காவல்துறையினர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அவர் வெளியே வந்தார்.
VJ சித்ரா மரணமடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் அவரது தற்கொலையில் இருக்கும் சர்ச்சைகளும் கேள்விகளும் ஓய்ந்தபாடில்லை. சமீபத்தில் பேட்டி அளித்திருக்கும் சித்ராவின் கணவர் ஹேம்நாத், விஜய் டிவி VJ ரக்ஷனும், குறிஞ்சி செல்வம் என்ற நபரும்தான் சித்ராவின் தற்கொலைக்கு காரணம் என்று தெரிவித்திருக்கிறார். விரைவில் இதனை ஆதாரங்களுடன் நிரூபிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.