டெல்லியில் உள்துறை ஆலோசகராக இருந்த விஜயகுமார் ஐபிஎஸ் தனது பணியை ராஜி னாமா செய்துவிட்டு தமிழ்நாடு திரும்பி உள்ளார். வீரப்பனை சுட்டுக்கொன்ற சிறப்பு படையின் தலைவராக இருந்தவர் விஜயகுமார். காஷ்மீர் ஆபரேஷனிலும், உள்துறை விவகாரங்களிலும் அமித் ஷா, ஐபியில் பணியாற்றிய ஆர்.என்.ரவி ஆகியோரிடம் நெருக்கமாக இருந்தார். தொடர்ந்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் மோதல் நீடித்து வரும் நிலையில் விஜயகுமாரின் வருகை பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.
இவர் திடீரென தமிழ்நாட்டிற்கு திரும்பி உள்ளது பல விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ஆளுநரின் ஆலோசகர் பதவியில் இருந்து பிறகு உள்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஓய்வுக்கு பிற பதவியாக அவருக்கு இந்த ஆலோச கர் பதவி வழங்கப்பட்டது