Categories
அரசியல்

தீபாவளியின் முக்கியத்துவம் என்ன?…. வியக்க வைக்கும் வரலாற்று சிறப்பு…. இதோ சில தகவல்….!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகை கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்ததை நினைவு கூறும் நாளாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து விதவிதமான உணவுகளை செய்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் தீபாவளி நாளில் லட்சுமி தேவியை வேண்டி மண் விளக்கு ஏற்றி பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.இந்த பண்டிகை ராமர தனது 14 ஆண்டு கால வனவாசத்திற்கு பின்னர் அயோத்திக்கு திரும்பியதை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுகின்றது. இந்த தீபாவளி நாளில் லட்சுமி தேவி தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்.

இந்த புனித நாளில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தால் எண்ணியது கிடைக்கும். தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து பூஜையறையில் லட்சுமி தேவிக்கு குத்துவிளக்கு ஏற்றி தெய்வங்களுக்கு நெய்வேத்தியம் படைப்பார்கள் . அதேசமயம் வாசலில் ரங்கோலி கோலம் போட்டு வீடுகளில் முன்பு தோரணம் கட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள் என புராண வரலாறு கூறுகிறது.

Categories

Tech |