16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, வாலிபரை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மேல்காங்கிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் காசிலிங்கம் மகன் ஜெயபால்(23). இவர் முத்தாண்டிக்குப்பம் பகுதியில் வசித்து வரும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக சொல்லி அவரிடம் நெருங்கி பழகி வந்ததோடு, உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அச்சிறுமி இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயபால் மீது இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவருகிறார்.இவ்வாறு 16 வயது சிறுமியை, வாலிபர் கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.