Categories
சினிமா

டிரைக்டர் சஜித்கான் மீது பாய்ந்த பாலியல் குற்றச்சாட்டு!…. மனம் திறந்த நடிகை ராணி சாட்டர்ஜி….!!!!

நடிகைகள் பல பேர் மீ டூ இயக்கம் வாயிலாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தினர். இவற்றில் பிரபல இந்தி டிரைக்டர் சஜித்கானும் சிக்கி கொண்டார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகாரளித்து இருந்தனர். இந்நிலையில் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16வது சீசன் நிகழ்ச்சியில் சஜித்கானும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இதனிடையில் மீ டூ புகாரில் சிக்கிய சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினரும் கண்டன குரல் எழுப்பினர். இந்தி நடிகை மந்தனா கரிமி திரையுலகை விட்டே விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சஜித்கான் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இந்த கொடூரரை பிக்பாஸ் போட்டியாளராக சல்மான் கான் எப்படி அறிமுகப்படுத்தலாம் என விளாசி இருக்கிறார்.

அதன்பின் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியான சுவாதிமலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு எழுதியுள்ள கடிதத்தில், டிரைக்டர் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அவர் மோசமானவர் என்பது இதன் வாயிலாக தெரிகிறது. எனினும் அப்படிப்பட்டவரை சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள செய்திருப்பது தவறானது ஆகும். இதனால் அவரை உடனே பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நீக்கவேண்டும் என கூறியுள்ளார். இந்த நிலையில் டிரைக்டர் சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்ககோரி மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு கடிதம் எழுதியதிலிருந்து சமூக ஊடகம் வழியே தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறது என சுவாதி மலிவால் தெரிவித்துள்ளார்.

டிரைக்டர் சஜித்கானுக்கு எதிராக சலோனி சோப்ரா, ஷெர்லின் சோப்ரா, ஆகானா கும்ரா மற்றும் மந்தனா கரிமி ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர். அண்மையில் கனிஷ்கா சோனி சஜித்கானுடனான தன் அனுபவம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார். இந்த சூழ்நிலையில் சஜித்கான் மீது பிரபல போஜ்புரி நடிகை ராணி சாட்டர்ஜி அதிரடி பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, ஹிம்மத்வாலா படப்பிடிப்பின் போது, சஜித்கான் அவராகவே என்னை கூப்பிட்டு தன்னுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்று கூறினார். பிறகு அவர் என் வீட்டுக்கு வா, சந்தித்து பேச வேண்டும் என கூறினார். அத்துடன் வரும் போது மேலாளர் (அல்லது) பி.ஆர். என யாரும் இன்றி தனியாக வரவேண்டும் எனவும் கூறினார்.

இது வழக்கம் போல் நடைபெறும் சந்திப்பு எனவும் கூறினார். பாலிவுட்டில் ஒருபெரிய டிரைக்டர் எனும் அடிப்படையில் அவர் கூறியபடி நடந்துகொண்டேன். ஜுகுவிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது வீட்டில் அவர் தனியாகவே காணப்பட்டார். என்னிடம் தோக்கா தோக்கா குத்து பாட்டுக்கு நடனமாட வைக்கிறேன் என முதலில் கூறினார். இதனால் குட்டை லெகங்கா அணியவேண்டும் என என்னிடம் கூறினார். அதன்பின் என்னுடைய கால்களை காட்டும்படி கூறினார். நான் கால்வரை ஸ்கர்ட் அணிந்து இருந்தேன். பின் அதை முழங்கால்கள் வரை மேலே இழுத்துவிட்டேன். இந்நிலையில் அவர் திடீரென்று என்னிடம் மார்பளவு என்ன..? என கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தினார். மேலும் கூச்சப்பட வேண்டாம், உனக்கு காதலர் இருக்கிறாரா..?, அவருடன் பாலியல் உறவுவைத்ததுண்டா? என அடுத்தடுத்து கேட்டார். உடனடியாக நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். தகாதமுறையில் அவர் என்னை தொடுவதற்கு முயன்றார் என ராணி கூறியுள்ளார்.

Categories

Tech |