Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டில் தேவையில்லாத மொபைல் எண்ணை டெலிட் செய்யலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது.இந்நிலையில் நீங்கள் ஆதார் கார்டு வாங்கி பல வருடங்கள் முடிவடைந்து இருந்தால் அதை நீங்கள் கொடுத்திருக்கும் மொபைல் நம்பர் தற்போது உங்களிடம் பயன்பாட்டில் இருக்க வாய்ப்பு குறைவு தான். ஒருவேளை நீங்கள் அந்த மொபைல் நம்பரை பயன்படுத்தவில்லை என்றால் மொபைல் எண்ணை மாற்றுவதற்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் ஆதாரில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. தேவையில்லாமல் இணைந்துள்ள மொபைல் எண்ணை நீக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.அதன்படி உங்களின் ஆதார் கார்டில் தேவையில்லாத மொபைல் நம்பர் இருந்தால் அதனை எப்படி நீக்குவது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

அதற்கு முதலில் https://tafcop.dgtelecom.gov.inஎன்ற இணையதள பக்கத்திற்கு சென்று அதில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். தற்போது உங்களின் மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும். அதனை உள்ளிட்டு நீங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்துள்ள அனைத்து மொபைல் எண்களும் அங்கு பட்டியலிடப்படும். இறுதியாக நீங்கள் பயன்படுத்தாத மொபைல் எண்ணை தேர்வு செய்து அதனை நீங்கள் நீக்கிக் கொள்ள முடியும்.

Categories

Tech |