நெதர்லாந்துக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 121 ரன்கள் குவித்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் 5வது போட்டியில் இன்று (அக்.,18) ஜீலாங்கில் நமீபியா – நெதர்லாந்து அணிகள் மோதி வருகிறது.. இரு அணிகளும் முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றன. ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கையை நமீபியா தோற்கடித்தது. அதேபோல நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியைத் தோற்கடித்தது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி நமீபியா அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய மைக்கேல் வான் லிங்கன் 20 ரன்களிலும், திவான் லா காக் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். அதன்பின் ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன் 0, ஸ்டீபன் பார்ட் 19 என அவுட் ஆனதால் நமீபியா அணி தடுமாறி 11.2 ஓவரில் 63/4 ரன்கள் மட்டுமே எடுத்து.
இதையடுத்து ஜான் ஃப்ரைலின்க் மற்றும் கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுமையாக ஆடினர். கடைசியில் 18-வது ஓவரில் ஜான் ஃப்ரைலின்க் 43 (48) ரன்களில் அவுட் ஆனார்.. அதனைத் தொடர்ந்து எராஸ்மஸ் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, கடைசியில் டேவிட் வைஸ் 11, ஜேஜே ஸ்மிட் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து நமீபியா அணி 121 ரன்கள் குவித்துள்ளது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் 2 விக்கெட்டுகளும், டிம் பிரிங்கிள், கொலின் அக்கர்மேன், பால் வான் மீகெரென் மற்றும் ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
Namibia have set a target of 122 for Netherlands 👀
Will the score prove enough?#NAMvNED | 📝: https://t.co/ZgB2xnydzr pic.twitter.com/KgwPpympa2
— ICC (@ICC) October 18, 2022