சிங்கப்பூர் அரசு, தங்கள் மக்களுக்கு பூச்சிகளை உணவாக உண்ண அனுமதி வழங்குவது குறித்து பரிசீலித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசு தங்கள் நாட்டு மக்கள் பூச்சிகளை உணவாக உண்ணவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கிறது. அதன்படி இதற்கு அனுமதி வழங்கப்பட்டால் தேனீக்கள், வண்டுகள் ஆகிய பூச்சிகளை நாட்டு மக்கள் உண்ணலாம். இந்த பூச்சிகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது எண்ணெயில் பொரித்து தின்பண்டங்களாகவும் உண்ணலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐரோப்பிய யூனியன், தாய்லாந்து மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் பூச்சிகளை உண்ண அனுமதி இருக்கிறது. எனவே சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு துறையானது அந்நாடுகளிடம் இது குறித்த நடைமுறைகளை பெற இருக்கிறது.