Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் – விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி …!!

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜெயலலிதா இறந்த தேதியில் குழப்பம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அப்பல்லோ மருத்துவமனையில் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்திருக்க கூடிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கை ஏற்கவில்லை என்று ஆறுமுகச்சாமி ஆணையம் கூறியிருக்கிறது. ஜெயலலிதா இறந்த நாள் குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்திருக்க்கும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

ஜெயலலிதா இறந்த நேரம் ஐந்தாம் தேதி இரவு 11:30 என்று மருத்துவமனையில் கூறப்பட்டிருக்கும் நிலையில், சாட்சியங்கள் நான்காம் தேதி மதியம் மூன்று முப்பது மணி இறந்ததாக  கூறுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த தகவல்கள் எல்லாம் சசிகலாவால் ரகசியமாகப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவிற்கும் இடையே முன்பு பிளவு ஏற்பட்டது. பிறகு மீண்டும் சேர்ந்து கொண்டார் சசிகலா. அதற்கு பிறகு அவர்கள் இருவருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |