இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிசிசிஐ தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் ரோஜர் பின்னி தலைவராக தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிசிசிஐயின் தற்போது தலைவராக இருக்கும் கங்குலி பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், ரோஜர் பின்னி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 1983 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் ரோஜர் பின்னி என்பது குறிப்பிடத்தக்கது.
Categories