கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை மூடி மறைக்காமல் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும். யாரெல்லாம் அவர்களோடு தொடர்பில் இருந்தார்கள். யாருக்கு எல்லாம் தொலைதூர தொடர்பிருந்தது, இதையெல்லாம் மனதில் கொண்டு, முழுமையாக இந்த பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்றைக்கு NIAவோடு இணைந்து செயல்படுவதாக தமிழக காவல்துறை இருக்க வேண்டும். ஏன் என்று சொன்னால் ? இந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளுடைய நெட்வொர்க் என்பது, அவர்களுடைய தொடர்பு என்பது, தமிழக எல்லை தாண்டியும் இருக்கிறது. ஆகவே இவர்களுக்கு எங்கெங்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பதை முழுமையாக கண்டறிவதற்கு NIAவோடு இவர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.
தமிழக அரசினுடைய இந்த மெத்தனப் போக்கையும், தமிழக அரசின் உடைய இந்த பயங்கரவாதத்தை மூடி மறைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை கண்டித்தும், கோவையை பயங்கரவாதிகளிடமிருந்து காத்து நிற்க வேண்டும் என்பதற்காக கோவை மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி மாநகரம் முழுவதும் காலை ஆறு மணியிலிருந்து, மாலை 6:00 மணி வரை முழுமையான பந்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.
இனியாவது அவர் விழித்துக் கொள்ள வேண்டும். ஆகவே நாங்கள் கோவை மாநகரத்திற்கு பெருமக்களை வேண்டுவது எல்லாம், நம்முடைய எதிர்ப்பையும், பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு ஒரு போதும் அடிபணிய மாட்டோம் என்பதை பறைசாட்டுகின்ற வகையில் இந்த முழுமையான பந்திக்கு உங்களுடைய ஆதரவை தர வேண்டும் என தெரிவித்தார்.