அஞ்சல் அலுவலகம் பிபிஎப், சுகன்யாசம்ரித்தி ஆகிய பல வகையான சிறு சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புது வசதியை துவங்கியுள்ளது. அஞ்சல் அலுவலகம் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த புது வசதியின் வாயிலாக நீங்கள் துவங்கியுள்ள கணக்கு பற்றிய முழுமையான தகவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். அதன்படி சிறு சேமிப்பு திட்டங்களுக்கு இ-பாஸ்புக் அம்சம் துவங்கப்பட்டிருக்கிறது.
இனி வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் ஆகிய இதரசேவைகளை செயல்படுத்த வேண்டிய தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகம் அறிமுகப்படுத்தி இருக்கும் இந்த இ-பாஸ்புக் அம்சத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பிபிஎப், சுகன்யா சம்ரித்தி ஆகிய எந்தவொரு கணக்குகளின் இருப்புத் தொகையையும் வீட்டிலிருந்த படியே நொடிப்பொழுதில் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
இ-பாஸ்புக் வசதியைப் பெறுவதற்கு உங்கள் கணக்குடன் மொபைல் எண்ணை இணைக்கவேண்டும். அதுமட்டுமின்றி பிபிஎப், சுகன்யாசம்ரித்தி ஆகிய கணக்குகளோடு கட்டாயமாக உங்களது மொபைல் நம்பரை இணைந்திருக்கவும். மொபைல் எண்ணை இணைக்கவில்லையெனில் பிழை ஏற்படும். அஞ்சல் அலுவலகத்துக்கு சென்றும் கூட நீங்கள் உங்களது கணக்குகளுடன் மொபைல் நம்பரை இணைத்துக் கொள்ளலாம். தற்போது பிபிஎப், சுகன்யாசம்ரித்தி ஆகிய கணக்குகளின் இருப்பினை எவ்வாறு சரிபார்ப்பது என இங்கு தெரிந்துகொள்வோம்.
# அதிகாரப்பூர்வமான வலைத்தளமான www.indiapost.gov.in (அல்லது) www.ippbonline.com எனும் தளத்திற்கு செல்லவும்.
# அத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இ-பாஸ்புக் என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
# பிறகு https://posbseva.ippbonline.com/indiapost/signin என்ற நேரடி இணைப்பை கிளிக் செய்யவேண்டும்.
# இதையடுத்து மொபைல்எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
# தற்போது உங்கள் மொபைலுக்கு வந்திருக்கும் ஓடிபி-ஐ பதிவிட்டு, இ-பாஸ்புக்கைத் தேர்வு செய்யவும்.
# பின் பிளான் டைப்பை தேர்வு செய்து கணக்கு எண், ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சா போன்றவற்றை உள்ளிட்டு, வெரிஃபைக்கு ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும்,
# இந்நிலையில் இருப்பு சரிபார்ப்பு, மினி ஸ்டேட்மென்ட், முழு ஸ்டேட்மென்ட் ஆகிய ஏதேனும் ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
# இறுதியாக நீங்கள் எந்த ஆப்ஷனை தேர்வு செய்தீர்களோ அதன் முழுவிபவரங்கள் திரையில் காட்டப்படும்.