Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”ராஜினாமா செய்யுங்கள்” பாஜக மீது பாய்ந்த ரஜினிகாந்த் …!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசை கண்டித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில்  நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , டெல்லி வன்முறைக்கு  மத்திய அரசு உளவுத்துறையின் தோல்வியே காரணம். போராட்டத்தை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் . ட்ரம்ப் போன்ற தலைவர்கள் வரும் நேரத்தில் போராட்டத்தை மத்திய அரசு கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். நான் பாஜகவில் ஊதுகுழல் என்கிறார்கள். நான் உண்மையை சொல்கிறேன். ஆனால் என் பின்னல் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது.

சில அரசியல் கட்சிகள் மதத்தை வைத்து போராட்டங்களை தூண்டி விடுகின்றன. மதத்தை வைத்து அரசியல் செய்வது வன்மையாக கண்டிக்கின்றேன். போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்க வில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். அறவழியில் போராடலாம் , ஆனால் போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது .

CAA நிறைவேற்றப்பட்டது , குடியரசு ஒப்புதலுக்கு பின் சட்டம் ஆக்கப்பட்டுவிட்டது. குடியுரிமை திருத்த சட்டம் திரும்பப் பெறப்படும் என்று நம்பிக்கை எனக்கில்லை. வன்முறையை ஒடுக்கவிட்டால் ராஜினாமா செய்யுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாஜகவை கண்டித்து பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |