கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கைதுறையில் நியாயமாக, நேர்மையாக 99 % பத்திரிகையாளர்கள் இருக்கின்றீர்கள். உங்களை நியாயமாக நடத்துகின்றோம். சில பத்திரிகையாளர்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள், நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் தப்பு செய்யவில்லை. மன்னிப்பு என்பது என் ரத்தத்திலேயே கிடையாது.
தவறு செய்யாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அதுக்கு மேல என் செய்தியை போடுவதும், போடாததும் உங்கள் இஷ்டம். நீங்க நியூஸ கவர் பண்ணலாம். நீங்க நியூஸ் கவர் பண்ணாம இருக்கலாம், அது உங்கள் இஷ்டம். நான் தப்பு பண்ணாத போது நான் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது.
அண்ணாமலை தவறு செய்துவிட்டார் என்று நீங்கள் நினைத்தால், என்னை புறக்கணிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கு, நான் தவறு பண்ணவில்லை. அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. தவறு பண்ணாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், என்னை புறக்கணிக்க வேண்டும் என்று நண்பர்கள் தனிபட்ட முடிவு எடுத்தீங்கன்னா, நான் அதை ஏற்கிறேன் என்று தெரிவித்தார்.