இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரயில்களில் புதிதாக இணைக்கப்பட்டு வரும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்ய ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, விரைவு ரயில்களில் தலா நான்கு படுக்கை வசதியையும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் தலா இரண்டு படுக்கை வசதிகளும் ஒதுக்கப்படுகின்றன. மேலும் எகானமி ஏசி பெட்டிகளிலும் 2 படுக்கைகளை ஒதுக்க ரயில்வே உத்தரவிட்டுள்ளது மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.