Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு மறுநாள்… திருப்பதி போக பிளான் பண்ணிருக்கீங்களா?…. அப்போ உடனே இதை படிங்க….!!!!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். வரும் 25ம் தேதி மாலை 5.11 மணியிலிருந்து மாலை 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் கதவுகள் 11¼ மணி நேரம் (காலை 8.11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை) மூடப்படுகிறது.

இது தொடர்பாக திருப்பதி கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வரும் 25ம் தேதி சூரியகிரகணம் ஏற்படுவதால் சாமி தரிசனம், ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்குரிய தரிசனம், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

அதுமட்டுமின்றி சர்வ தரிசனத்தில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர். ஆகவே இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |