Categories
தேசிய செய்திகள்

OMG!… 18 மாத குழந்தையின் குடலை உருவிய கொடூர நாய்கள்…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…..!!!!

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரோஷமான நாய் இனங்களின் தாக்குதல் அதிகரித்து வந்ததை அடுத்து, அம்மாநில அதிகாரிகள் குறிப்பிட்ட நாய் இனங்களை தடைசெய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் மற்றொரு கொடூரமான சம்பவம் உத்திரபிரதேசத்தின் நொய்டா செக்டார் 100 பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் அரங்கேறியுள்ளது. அதாவது, 18 மாத குழந்தை தெரு நாய்களால் தாக்கப்பட்டு இறந்தது. அந்த கொடூர நாய்கள் குழந்தையின் குடலை கிழித்துள்ளது.

இந்த சம்பவம் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், வளாகத்திற்குள் விலங்குகளுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த 18 மாத குழந்தை அரவிந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது தாயார் சப்னாதேவி கூலி வேலைக்குச் சென்றதால் குடியிருப்பு பகுதியில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போதுதான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையில் குழந்தையின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின் பாதிக்கப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

Categories

Tech |