Categories
மாநில செய்திகள்

”ஜெ” மரணம் அறிக்கை; கிரிமினல் வழக்காக அரசு எடுக்க வாய்ப்பு – அடுத்தடுத்து பரபரப்பு ..!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம்,  ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்க்கான இயல்பான முடிவு வந்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.

காரணம் அப்பல்லோ மருத்துவமனையில் சேவை குறைபாடு இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவமனை கூறிவிட்டது. எனவே சேவை குறைபாடு பற்றி எதுவும் வராது, ஆனால் அதற்கு முன் பின்னாக நடந்த நிகழ்ச்சிகள், அதைப்பற்றி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஆராய்ந்து இருக்கிறது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட அரசாணையிலும் அப்படித்தான் இருக்கிறது. ஜெயலலிதா மரணத்திற்கு முன் பின்னான நிகழ்ச்சி, அப்படி பார்க்கும்போது…

ஜெயலலிதாவின் எக்ஸ்மோ கருவி அகற்றப்பட்ட போது கூட ஐந்து பேர் கையெழுத்து போட்டிருந்தார்கள், அவர்களில் சசிகலாவும் ஒருவர், விஜயபாஸ்கர் ஒருவர் மற்றும் அன்றைய சுகாதாரத் துறை செயலாளர் அவரும் ஒருவர், ஆக இவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் சில பரிந்துரைகளோடு கூறி இருக்கிறது.

ஆக இனிமேல் இது அரசு ரீதியான விசாரணையாக மாறும், அதாவது ஆணைய விசாரணை என்பது கிரிமினல் நடவடிக்கைக்கு உட்பட்டது அல்ல. ஆணையம் எப்போதுமே ஒரு உண்மையை கண்டறியும் கமிட்டி மாதிரி தான். விசாரணை நடத்தி அதன் அறிக்கையை அரசுக்கு தரும். அரசு அந்த அறிக்கையை சட்டமன்றத்தில் சமர்ப்பித்து அதற்கு பிறகு கிரிமினல் நடவடிக்கை தேவையா ? இல்லையா ? என்பதை முடிவு செய்து துறை வாரியான நடவடிக்கை எடுப்பார்கள். அதற்கான முதல் புள்ளி இப்போது விழுந்து இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

Categories

Tech |