மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் தராசு ஷ்யாம், செப்டம்பர் மாதம் 2016 ஜெயலலிதா அவர்கள் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு நீர் சத்து குறைபாடு என்றுதான் காரணம் சொல்லப்பட்டது.
அதற்கு மறுநாளுக்கு மறுநாள் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஜெயலலிதா ஸ்டேபிளாக இருக்கிறார், நன்றாக இருக்கின்றார் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். ஒரு கட்டத்தில் டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்கள், ஜெயலலிதா முற்றிலும் நலமாகிவிட்டார். அவர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் வீட்டிற்கு போகலாம், அவராகத்தான் மருத்துவமனையில் இருக்கிறார் என்று கூட அவர் சொன்னார்.
அதே போல வெற்றிவேல் அவர்கள் ஆர்.கே நகர் 2.0 தேர்தலின் போது ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ஜெயலலிதா அவர்கள் பழச்சாரோ அல்லது வேறு ஏதோ ஒரு வகையான பாணம் அருந்துகின்ற வீடியோ வெளியிடப்பட்டது. இப்படியெல்லாம் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. எனவே மக்களுக்கு குறிப்பாக, பொதுமக்களுக்கு முழு விவரமும் தெரியவே இல்லை என்பதுதான் இதில் குற்றச்சாட்டு.
பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அன்றைக்கு என்ன சொன்னார் என்றால், நான் நேரடியாக சென்று பார்த்தேன் என்று சொன்னார். அதுபோல அவர் ஒரு புத்தகம் வெளியிட்டார். அதை வந்து அன்றைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் வெளியிட்டார்கள். அதிலிருந்து ஜெயலலிதா தனக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம், நான் பூங்கொத்து கொடுத்த விஷயம் எல்லாவற்றையும் குறிப்பிட்டு இருந்தார். இப்படி பல விஷயங்களை முன்னுக்குப் பின் முரணாக இருந்தவை என்பது உண்மைதான் என தெரிவித்தார்.