Categories
தேசிய செய்திகள்

“டெல்லி கலவரம்” மீண்டும் உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு…. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…..!!!!

டெல்லியில் கடந்த 2020-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் பேரணி நடத்தினர். அந்த பேரணியின் போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்த வன்முறை சம்பவமானது 3 நாட்கள் நீடித்த நிலையில், 53 பேர் அநியாயமாக கொல்லப்பட்டதோடு, 700-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அதோடு நூற்றுக் கணக்கான வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் டெல்லியே கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் என்று ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலித் குற்றம் சாட்டப்பட்டார்.

இதனால் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உமர் காலித் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது பயங்கரவாத செயலுக்கு உறுதுணையாக இருந்த காரணத்திற்காக ஜாமீன் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் உமர் காலித்தை சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டனர். இந்நிலையில் உமர் காலித் 2 முறை ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் ஜாமீன் வழங்குவதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித் துவிட்டனர்.

ஆனால் கலவரத்துக்கு உறுதுணையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இஸ்ரத் ஜகான் உட்பட 6 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் தற்போது உமர் காலித் 3-வது முறையாக உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் வழங்குவதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் உமர் காலித் நான் என்ன தவறு செய்தேன். எதற்காக எனக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள். உண்மையான குற்றவாளிகள் யார் என்பது காவல்துறையினருக்கு நன்றாக தெரிந்திருந்தும், வேண்டுமென்றே என்னை ஒரு குற்றவாளி போல் கைது செய்து வைத்திருக்கிறார்கள். நான் கலவரத்தை தூண்டவில்லை என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.

Categories

Tech |