Categories
உலக செய்திகள்

அனைவரும் நலமாக வாழ வேண்டும்… பிரபல நாட்டில் “குத்து விளக்கு ஏற்றி கொண்டாடப்பட்ட தீபாவளி”….!!!!

பிரபல நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி தீபாவளி கொண்டாடியுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகருக்கான இருப்பிடம் அமைந்துள்ளது. இங்கு வருகின்ற 24-ஆம் தேதி நடைபெற இருக்கும் தீபாவளியை முன்னிட்டு தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் குத்துவிளக்கு மற்றும் மெழுகுவர்த்திரிகள் ஏற்றி அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர் கூறியதாவது. உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை  கொண்டாடும் அனைத்து சமூகங்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியை பெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |