Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 1 நாளைக்கு மட்டும் இவ்வளவா….? “BIGG BOSS” போட்டியாளர்களின் சம்பள லிஸ்ட்…. வியப்பில் ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவரை 5 சீசன்கள் சிறப்பாக நடைபெற்ற நிலையில், கடந்த 9-ம் தேதி முதல் 6-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், மைனா நந்தினி வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்துள்ளார். தற்போது பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவருக்கான போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் 1 நாள் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மைனா நந்தினிக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாயும், ஜி.பி முத்துவுக்கு 15 முதல் 18 ஆயிரம் ரூபாயும், அசல் கோலாருக்கு 15 முதல் 17 ரூபாயும், ஷிவினுக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாயும், அசீம்க்கு 22 முதல் 25 ஆயிரம் ரூபாயும், ராபர்ட் மாஸ்டருக்கு 25 முதல் 27 ஆயிரம் ரூபாயும், ஆயிஷாவுக்கு 28 முதல் 30 ஆயிரம் ரூபாயும், செரினாவுக்கு 23 முதல் 25 ஆயிரம் ரூபாயும், மணிகண்டனுக்கு 18 முதல் 24 ஆயிரம் ரூபாயும், ரச்சிதாவுக்கு 25 முதல் 28 ஆயிரம் ரூபாயும், ராம் ராமசாமிக்கு 12 முதல் 12 ஆயிரம் ரூபாயும், ஏடிகேவுக்கு 16 முதல் 19 ஆயிரம் ரூபாயும், ஜனனிக்கு 21 முதல் 26 ஆயிரம் ரூபாயும், சாந்திக்கு 21 முதல் 26 ஆயிரம் ரூபாயும், விக்ரமனுக்கு 15 முதல் 17,000 ரூபாயும், அமுதவாணனுக்கு 23 முதல் 27 ஆயிரம் ரூபாயும், மகேஸ்வரிக்கு 18 முதல் 23 ஆயிரம் ரூபாயும், வி.ஜே கதிரவனுக்கு 18 முதல் 22 ஆயிரம் ரூபாயும், குயின்சிக்கு 15 முதல் 20 ஆயிரம் ரூபாயும், நிவாவுக்கு 12 முதல் 18 ஆயிரம் ரூபாயும், தனலட்சுமிக்கு 11 முதல் 18 ஆயிரம் ரூபாயும் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும் பிக் பாஸ் போட்டியாளர்களின் சம்பள விவரத்தை கேட்ட ரசிகர்கள் மிகவும் வியப்படைந்துள்ளனர்..

Categories

Tech |