Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா விவகாரம்…. வியப்பில் ஆழ்த்திய சுகாதாரத்துறை செயலாளரின் பதில்…. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை….!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   அம்மாவின்  இறப்பு  தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம்   8  பேர் மீது விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதில் மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ராமமோகன் ராவ், பிரதாப் ரெட்டி உள்ளிட்ட 8  பேர் மீது ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அதில் அம்மாவை  சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு அத்தகைய நடவடிக்கை நமது இந்திய மருத்துவர்களை அவமானப்படுத்தும் செயலாக இருக்கும் என சுகாதார துறையின் செயலாளர் அளித்த பதில் அனைவரையும் வியப்பில்  ஆழ்த்தியது. மேலும் கால்நடை மருத்துவரான ராதாகிருஷ்ணனை தகுதியின் அடிப்படையில் ஒரு மருத்துவர் என கூறாமல் இருப்பதே உகந்தது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர் கூற்று சரியானவை என எடுத்துக் கொண்டாலும் அம்மாவுக்கு  சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்து சிங்கப்பூரிலிருந்து மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டனர். இது இந்திய மருத்துவர்களின் நம்பிக்கைக்கு அழுத்தமளிப்பதாக இல்லையா என ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

Categories

Tech |