கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு செல்லாமல்கே.ஜி வலசில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் மீது படுத்து தூங்கியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக நீரோடையில் தவறி விழுந்த சேகர் நீந்த முடியாமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேகரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.