Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: முதல் ஆளா இவரத்தான்‌ வெளியே அனுப்ப போறாங்க…. மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் பிறகு தனலட்சுமி மற்றும் ஜி.பி முத்துவுக்கு இடையேயான மோதலால் தனலட்சுமி மீது ரசிகர்கள் மிகுந்த கடுப்பில் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் தொடங்கி இருக்கிறது.

இதில் ஜிபி முத்து ஆயிஷாவின் பெயரை நாமினேட் செய்திருக்கிறார். அதன் பிறகு குவின்சி ரச்சிதாவின் பெயரை நாமினேட் செய்திருக்கிறார். இதனையடுத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறப் போவது தனலட்சுமி தான் என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள். ஏனெனில் தனலட்சுமியை பார்த்தாலே ரசிகர்கள் மிகவும் எரிச்சலாக இருக்கிறது என்கிறார்கள.

ஆனால் எது எப்படி இருந்தாலும் கடைசி முடிவை பிக்பாஸ் தான் எடுக்கும் என்பதால் தனலட்சுமி ஒருவேளை பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். இதற்கிடையில் தற்போது 2 விதமான ப்ரோமோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஒரு ப்ரோமோவில் நடிகர் அசீமும், மற்றொரு ப்ரோமோவில் ஜனனியும் அழுது கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஜனனி அழுத போது சக போட்டியாளர்கள் அக்கறையுடன் விசாரிக்க, அசீம் அழுத போது மட்டும் கண்டுகொள்ளவில்லை. மேலும் குவின்சியிடம் அத்துமீறிய கோலாரு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கும் நிலையில், வார இறுதியில் கமல்ஹாசனாவது கோலாரை` வெளுத்து வாங்குவார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Categories

Tech |