Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உயிர் காக்கும் சிகிச்சை பயிற்சி…. “தூத்துக்குடியில் சாதனை”…. ஆட்சியர் தெரிவிப்பு….!!!!!

தூத்துக்குடியில் விபத்தில் சிக்கியவருக்கு ஒரே நேரத்தில் 6,148 பேருக்கு உயிர் காக்கும் சிகிச்சை பயிற்சி வழங்கி சாதனை படைத்திருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் உலக விபத்து மற்றும் காயம் தடுப்பு தினத்தை முன்னிட்டு முதலுதவி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க மாநகராட்சி மேயர், போலீஸ் சூப்பிரண்டு, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் காட்டப்பட்டது. இதன்பின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் உலக விபத்து மற்றும் காயத்தடுப்பு தின உறுதி மொழியில் எடுக்கப்பட்டது.

பின் நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தமிழக அரசு எடுத்த சிறிய முயற்சி தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையமாகும். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக விபத்து நேரத்தில் செய்ய வேண்டிய முதலுதவி குறித்த சிறிய பயிற்சி 5000 மாணவர்கள், அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுநல தன்னார்வலர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் 5000 பேருக்கு சென்ற மாதம் கோவையில் பயிற்சி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 6148 பேருக்கு பயிற்சி அளித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |