Categories
சினிமா தமிழ் சினிமா

“ரஜினி மன்றம்” ரசிகர்கள் விடுத்த திடீர் கோரிக்கை…. தலைவர் எடுக்கப் போகும் முடிவு என்ன….?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில், உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார் ரஜினி. இதனால் மாநிலம் முழுதும் செயல்பட்டு வந்த ரஜினி ரசிகர்கள் மன்றத்தின் உறுப்பினர்கள் வேறு கட்சிகளில் இணைய ஆரம்பித்தனர். தற்போது ரஜினியின் தீவிர ரசிகர்கள் மட்டுமே மன்றத்தில் இருக்கிறார்கள்.

இதனையடுத்து ரஜினிகாந்த் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் அவருடைய படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே ரஜினி மன்றத்தின் சார்பாக அதை கொண்டாடுவது மற்றும் நற்பணிகளை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தற்போது பல்வேறு முக்கிய உறுப்பினர்கள் ரஜினி மன்றத்திலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்து விட்டதால், ரஜினி மன்றத்தில் செயல்படுவதற்கு தலைமையின் உரிய அனுமதி வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தற்போது கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரஜினி ரசிகர் மன்றத்தில் இருந்து விலகிய மதியழகன் தற்போது திமுக கட்சியில் எம்எல்ஏவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |