மீனம் ராசி அன்பர்களே..!
தொழில் வியாபாரத்தில் திருப்தி உண்டாகும்.
பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி அதிகம் அன்பு காட்டுவார்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரிடமும் பகை பாராட்டாமல் இருக்கவேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.
தூரத்திலிருந்து வரக்கூடிய தகவல்கள் மகிழ்ச்சியளித்தாலும், சில நேரத்தில் குழப்பங்களை உண்டாகும். நிதானத்துடன் வேலையை அணுகுங்கள். இன்றையநாள் சிரமமாகத்தான் இருக்கும். ஆலய வழிபாடு, இறைவழிபாடு ஆகியவற்றால் மனதை பக்குவப்படுத்துங்கள். குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இருக்காது. நீங்கள் செய்யும் செயலுக்கு குடும்பத்தாரும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள், வாக்குவாதங்கள் வேண்டாம். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு, சிறியளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.