Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுக்கிறார்கள்”… சேலம் ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் பரபரப்பு புகார்….!!!!!!

நாட்டு துப்பாக்கி இல்லாததால் பெண் தர மறுப்பதாக ஆட்சியரிடம் நரிக்குறவர்கள் புகார் மனு அளித்தார்கள்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களின் கோரிக்கைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனுக்களாக கொடுத்தார்கள். அப்போது சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியபட்டணம் குறவன் காடு பகுதியில் இருக்கும் நரிக்குறவர்கள் சிலர் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, குறவன் காடு பகுதியில் 80க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றோம்.

நாங்கள் பாரம்பரியமாக நாட்டு துப்பாக்கியை கடவுளாக நினைத்து வழிபட்டு வருகின்றோம். திருமணம் செய்யும்போது துப்பாக்கியில் தாலியை வைத்து வணங்கிய பிறகு தான் மணப்பெண் கழுத்தில் தாலி கட்டப்படும். இந்நிலையில் நாட்டு துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரும் உரிமம் பெற வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதனால் நாட்டு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கோரி பலமுறை முயற்சித்தும் உரிமம் தர மறுக்கின்றார்கள். நாட்டு துப்பாக்கி வைத்திருந்தால்தான் எங்கள் சமுதாயத்தில் திருமணத்திற்கு பெண் தருவார்கள். இதனால் ஒரு வருடத்தில் 30 திருமணங்கள் தடைப்பட்டு இருக்கின்றது. ஆகையால் துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |