வாடகைத் தாய் சர்ச்சை தொடர்பாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அமலில் உள்ள வாடகைத்தாய் தொடர்பான சட்டப்படி, விதிகளை மீறி இருந்தால் நயன் – விக்கிக்கு 10 ஆண்டுவரை சிறை கிடைக்கலாம் என்பது போன்ற தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி ஆவணங்களை ஒப்படைக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவின் வாடகைத்தாய் விவகாரம் குறித்து 3 பேர் கொண்ட குழு விசாரித்து வருகிறது. ஆனால், இருவரும் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இருவரும் வாடகைத்தாய் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்