பினராய் விஜயன் மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலமைச்சராக விளங்குவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளா போன்ற பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இதனை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டது.
இந்நிலையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் , புதுவை முதல்வர் நாராயணசாமி கல்வியாளர் வசந்தி தேவி , இந்து குழுமத்தலைவர் ராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பேசிய நாராயணசாமி கூறும் போது , கேரள அரசை பாராட்டினார். அதில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆளுநர் உத்தரவை மீறி அவர் அந்த தீர்மானத்தை நிறைவேற்றியது , மட்டுமல்லாமல் இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலமைச்சராக விளங்குகின்றார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.