கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல்நிலையில் கவனமாக இருந்து சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். இன்று மனதில் ஏதாவது கொஞ்சம் குழப்பம் இருந்துகொண்டேதான் இருக்கும்.
பய உணர்வும் ஏற்படும், தூக்கம் குறையலாம், வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். அடுத்தவருடன் பகை ஏற்படாமல் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. பேசும்பொழுது எப்பொழுதுமே நிதானத்தை கடைபிடியுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு மற்றும் நீல நிறம்