கல்வியாளர் தாவுத் மியாகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் காயிதே மில்லத்தின் பெயரனும் ஆவார். இந்நிலையில் சென்னையில் கஸ்தூரி ரங்கன் சாலையில் வசித்து வந்த அவர் திடீரென்று மழைநீர் கால்வாயில் பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதனால் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து இவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இவர் சாதாரண அறைக்கு மாற்றபட்டார். தற்போது இவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.